தலைவர் வரலாறு

சினிமா வாழ்கை

திறமையை மட்டுமே வழிச்செலவிற்கு வைத்துக்கொண்டு உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் கலைத்துறையில் வெற்றியை முகர்ந்தவர் ரஜினிகாந்த்.

  • கர்நாடகாவில் டிசம்பர் 12ம் தேதி, 1950ல் பிறந்தவர் தான் நம்ம சிவாஜிராவ். ராமோஜி ராவ்க்கும், ராமாபாய்க்கும் நான்காவது மகனான சிவாஜி பெங்களூர் ஆச்சாரியா பாடசாலை, விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்விபயின்றார். படிப்பில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் ஈடுபாட்டுடன் இருந்தார். படித்துமுடித்ததும், அங்கேயே பேருந்து நடத்துனராக பணியாற்றிக்கொண்டே நாடகங்களில் நடித்துவந்தார் சிவாஜிராவ்.
  • நடிகராக விரும்பி சென்னைவந்த ரஜினியை,சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார் ரஜினியின் நண்பர். அதனால் 2 ஆண்டுகள் பணிக்குச் செல்லாததால் கண்டக்டர் வேலையும் போய்விட்டது.
  • ரஜினிகாந்த் முதல் முதலாக 1975ல் கதா சங்கமா என்ற கன்னட படத்தில் நடித்தார். அதே வருடம் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வராகங்கள் படத்திலும் சிறிய வேடமேற்றார். தொடர்ந்து அவர் நடித்த மூன்றுமுடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள், 16 வயதினிலே, காயத்ரி படங்களே இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் காரணமான முக்கிய படங்கள். வில்லன் கதாபாத்திரம் ஏற்றுக்கொண்டிருந்த ரஜினி நாயகனாக நடித்த முதல் படம் பைரவி. தொடந்து முள்ளும்மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோகேட்ட குரல் உள்ளிட்ட படங்கள்.
 

விருதுகள்

1978

சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "முள்ளும் மலரும்" படத்திற்காக வழங்கப்பட்டது.

1982

சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "மூன்று முகம்" படத்திற்காக கிடைத்தது

1984

சிறந்த நடிகருக்கான "பிலிம் பேர் விருது", "நல்லவனுக்கு நல்லவன்" படத்திற்காக கிடைத்தது

1984

"நல்லவனுக்கு நல்லவன்" படத்திற்காக நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது".

1984

தமிழக அரசின் "கலைமாமணி விருது"

1985

"ஸ்ரீராகவேந்திரர்" படத்திற்காக நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1988

சிறந்த சாதனையாளருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது" "ப்ளட் ஸ்டோன்" படத்திற்காக

1989

"எம்.ஜி.ஆர் விருது"

1991

"தளபதி" படத்திற்காக "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1992

"அண்ணாமலை" படத்திற்காக, "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1993

"வள்ளி" படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1995

"முத்து" படத்திற்காக, நடிகருக்கான "சினிமா எக்ஸ்பிரஸ் விருது"

1999

சிறந்த நடிகருக்கான "தமிழ்நாடு அரசு விருது" "படையப்பா" படத்திற்காக வழங்கப்பட்டது

2005

‛‛சந்திரமுகி’’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது.

2007

‛‛சிவாஜி’’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது.

2016

பத்ம விபூஷண் விருது, ஆந்திர அரசின் நந்தி விருது

2019

"கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது"

ரஜினியும்... பஞ்ச் டயலாக்கும்

காணொளி

நிகழ்வுகள்

16 Dec 20
அச்சரப்பாக்கம் ஒன்றியம்

மக்கள் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் Birthday cake வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

13 Dec 20
செம்பாக்கம்

மக்கள் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு செம்பாக்கத்தில் கேக் வெட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

13 Dec 20
மறைமலை நகர்

மறைமலை நகரில் மக்கள் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது

13 Dec 20
மறைமலை நகர்

தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மறைமலை நகரில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

காஞ்சி - செங்கை மாவட்ட செயலாளர்

ரஜினியின் மக்கள் மன்றத்தை மக்களுக்கான மன்றமாக மாற்றி வருகிறார் ஒருவர். ஆம் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் கல்வி என்பதை அறிந்த அவர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களின் கல்விக் கனவை தனது தொண்டு நிறுவனம் மூலம் நனவாக்கி வருகிறார். அந்த வள்ளல் தான் ஜெ.ஜெயகிருஷ்ணன்.

மார்ட்டின் லூதர்கிங்கின் மிகப் பிரபலமான வாசகம் ஒன்றுண்டு. I Have a dream என்பது தான் அந்த வாசகம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். ஒருவரின் கனவை பொறுத்தே லட்சியத்தின் உயரம் இருக்கும். வாழ்வில் சாதிப்பது என்பது பலருக்கும் பலவிதம். தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் வாழ்வதும், பொருளீட்டுவதும் தான் பலரின் பிரதான லட்சியமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் இந்த சமூகம் முன்னேற வேண்டும் என கனவு காண்பது வெகுசிலர் தான். அப்படி இந்த சமூக முன்னேற்றத்திற்காக ஏதாவது ஒன்றை தொடர்ந்து செய்து கொண்டே வருபவர் ஜெ.ஜெயகிருஷ்ணன். தனது ஜே.கே. பவுண்டேஷன் மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் ஜே.கே. மேலும்….

 

Photo Gallery

தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூர் திருப்போரூர் பம்மல் பல்லாவரம் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன.

பத்திரிக்கை செய்தி

CONTACT US


Email : [email protected]
Address: 19, Vellaiyan Road, kotturpuram, Chennai – 85, Tamilnadu, INDIA.

Copyright © kanchichengairmm. All Rights Reserved.